சனி, 15 ஜூன், 2013

யார் புத்திசாலி...

ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார்.சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.

அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.

4
போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது.

எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.

உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, ஓட்டிச் சென்று, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.

இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்.

இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.

எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்.

ஞாயிறு, 9 ஜூன், 2013

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?(How to Unlock A Datacard?)

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்றுhttp://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து 
CALCULATE
கொடுக்கவும்.

இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

சனி, 8 ஜூன், 2013

என்ன நடக்கிறது நம்மை சுற்றி????????????

என்ன நடக்கிறது நம்மை சுற்றி????????????

--பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் - 7 பேர்     
   பலி(இந்தியாவின் இடது பக்க ஆக்கிரமிப்பு அல்லது இது ஒரு வேளை  
   சோதனையாக இருக்கலாம்)
--சீன படைகள் இந்திய எல்லையில் குவிப்பு
--சீன தளவாடங்கள் இலங்கை எல்லையில் நிறுவப்பட்டு 
   வருகின்றன(இலங்கையின் தொலைதொடர்பு சேவையின்(Service Provider) 
   பெரும்பகுதி Bharti Airtel நிறுவனத்தால் வழங்கப்படுகிறது, அதே நேரம் 
   கருவிகள் ஒரு சீன ராணுவ உயர் அதிகாரியின் நிறுவனமான Huawei னால் 
   வழங்கப்படுகிறது )
-- இரண்டு மாதங்களுக்கு முன்னால் பதவியேற்ற சீன அதிபருடன் அமெரிக்கா 
    ஒப்பந்தம்

            என்ன நடக்கிறது நம்மை சுற்றி, அமெரிக்கா தனது காலனியாக வைத்திருக்கும் நம் இந்தியாவை காப்பாற்றிக்கொள்ள இந்த ஒப்பந்தம் போட்டதா? இல்லை சீனாவுடன் சேர்ந்து இந்தியாவை துண்டாட இந்த ஒப்பந்தம் போடப்பட்டதா? எதுவாக இருந்தாலும் 2014ல் அடுத்த தேர்தல் முடிந்தபின் தான் climax....